Friday, September 18, 2009

மு(எ)ன்னுரை




போதை கொள்ளச்செய்து, தீய விளைவுகளை உண்டாக்கும் தீண்டப்படாத ஒரு பொருள் மது – என்று இன்றைய வலிமைமிக்க ஊடகங்கள் ஒரு பதிவை நம் மனதில் ஏற்படுத்தி உள்ளன. ஆனால், மனதில் கிளர்ச்சியை உண்டாக்கி ஆடல் பாடல்களை அதிகம் அனுபவிக்கச்செய்யும் சோம பானமாக தேவ லோக இந்திரர்கள் பயன்படுத்தியதாக நாம் ப்ழைய புத்தகங்களில் படிக்கிறோம்..உடல் நலம் காக்கும் அருமருந்தாக அதே மது பயன்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றியும் நாம் காண்கிறோம்..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

மது அருந்துவதில் ஓர் நளினம் வேண்டும். அவசரப்பட்டாலோ , அதிகம் குடித்தாலோ விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக , இடைவெளி விட்டுவிட்டு குடித்தால் முழு சுவையையும் அனுபவிக்க முடியும், முழு பலனையும் அடைய முடியும். இதோ என்னுடைய மதுக்கிண்ணத்தில் ( :Blog ) அவ்வப்போது

அளவளவாக நிதானமாக சிறிது சிறிதாக மதுவை(கருத்துக்களை ) ஊற்றப்போகிறேன்.

நீங்களும் அவசரப்படாமல் , பாங்காக, பக்குவமாக, பதமாக சுவையோடு அருந்தி, உங்கள் அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி

10 comments:

  1. அண்ணா வாழ்த்துக்கள்! வலையுலகிற்கு வரவேற்கிறோம்!

    ReplyDelete
  2. சொல்ல மறந்துவிட்டேன்! சியர்ஸ்!

    ReplyDelete
  3. சரியான தருணத்தில் வலையுலகிற்கு நீங்கள் வருவது "சந்தோஷ்"த்தையும் மனநிறைவையும் தருகிறது. உங்கள் கருத்துகள் இயற்கை வேளாண்மை செய்யும் அன்பர்களுக்கு அதிக அளவில் பயனளிக்கும் அதே சமயம் விவசாயத்திற்கு மேலும் ஒரு வலைப்பூ. நன்மையான காரியங்கள் வேளாண்மை உலகிற்கு மட்டுமல்ல வலையுலகத்திற்கும் கிடைக்கும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    ReplyDelete
  4. பாராட்டத்தகுந்த முயற்சி. எழுத்தின் அழகும் அருமை. தொடருங்கள் அண்ணை.

    மணியன் குமரன்,
    கொழும்பு

    ReplyDelete
  5. வலையுலகுக்கு வருக. எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
    இதன் மூலம், நற்செய்திகளை பகிர்வதோடு நில்லாமல், தாங்கள் ஒரு நல்ல விசைஆகி , ஒரு பெரும் புரட்சியை உருவாக்க, எங்கள் அவா. மேலும் பதிவுகளை படிப்போர், பாரெங்கும் உள்ளனர், அதனால், தங்களுக்கு ஏதும் தொழில் நுட்ப அல்லது மற்றேதும் உதவி தேவைப்படின், தயங்காமல்கேளுங்கள்.

    ReplyDelete
  6. iyya welcome! you must boost agri farmer,

    ReplyDelete
  7. Thank you sir, We are welcoming your arrival in this blog. We want to see your Santhose Form in blog & it is verfy useful to the nature formers. expecting your drops of honey. Thank you.

    ReplyDelete
  8. குப்புசாமி ஐய்யா மது என்பதை தேன் என்று மொழிபெயர்த்து இருக்கிறார் பாருங்கள்! ;-) ( மதுவிலக்குச்சட்டம் தான் ஞாபகம் வருகிறது!)

    ReplyDelete
  9. ஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே...
    நெகிழ வைக்கும் நூறாண்டு வரலாறு!
    This is an article in 09/25 Pasumai vikatan, I see a huge potential for this method, to be taken to a wider audience. Will you be able to convert this into a blog, and we will work towards publicizing this big in many forums. Your perspective will be better than many of us techies, doing a copy paste. I have the original document from vikatan, if you want a copy of that for reference.

    ReplyDelete
  10. அய்யா தங்களை போன்றவர்கள் தமிழ்நாட்டிற்கு நிறைய தேவை. வேளாண்மை செய்பவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த தங்கள் பணி மேன்மேலும்
    தொடர வேண்டும். மேலும், தங்கள் தொடர்பு தகவல்கள் இருந்தால் பலருக்கு உதவும். ஆனால் அது தங்கள் முடிவிற்கு உட்பட்டது.
    நன்றி. பாலாஜி. மின் ஊடகவியலாளர். ஈரோடு.

    ReplyDelete