
செல்லுமிடமெல்லம் செல்போன் டவர்கள்
திரும்பிய பக்கமெல்லாம் திருமண மண்டபங்கள்
ரோட்டோர தோட்டமெல்லாம் பெட்ரோல் பங்குகள்
பட்டணத்தை ஒட்டிய பூமியெல்லாம் பகட்டான பிளாட்டுகள்
செந்நெல் விளைந்த வயலெல்லாம் செங்கல் விளையும் சூளைகள்
காற்றடிக்கும் இடங்களிலே காற்றாடி கோபுரங்கள்
கரும்பு விளந்த தோட்டமெல்லாம் இரும்பு பட்டறைகள்
பருத்தி விளைந்த பூமிகளெல்லாம் பல்கலைக் கழகங்கள்
சிறுதானிய நிலங்களெல்லாம் சிறு தொழில் நிறுவனங்கள்
புகையிலை பூமியெல்லாம் புகைகக்கும் ஆலைகள்
கனிகொடுத்த பகுதியெல்லாம் பிணி நீக்கும் மருத்துவ மனைகள்
குப்பைமேடுகளெல்லாம் குப்பைகொட்டும் அரசு அலுவலகங்கள்
மாமரங்களை அழித்தேதான் கோபுரங்கள் எழுகின்றன
பஸ்டாண்டு விரிவாக்கம் முதல்
பன்னாட்டு வானவூர்தி நிலயம்வரை
காவுகொள்வது கதிர்கள் ஆடிய கழனிகளையே
வெவ்வேறு கணக்குகளின் கவர்ச்சிகளினால்
விளைநிலம் குறையுது வேகமாக
வேறு தொழில்களின் ஈர்ப்பினிலே
வேளாண்மையை மறந்துவிட்டனர் விவரமான சிறுசுகள்
கட்டுமானத் தொழில்களிலேயே
கட்டுண்டு போனார்கள் விவசாயக் கூலிகள்
விளைவிக்க நிலமில்லை
அங்கே விளைவிப்பார் யாருமில்லை
வேலைசெய்ய ஆளுமில்லை
அங்கே மழையோடு மின்சாரத்தை காணவுமில்லை
ஜீ பூம்பா மந்திரத்தில்
தொழிற்சாலைகளை உருவாக்கலாம்
பண்டிதர்களையும் உருவாக்கலாம்
தானியத்தை உருவாக்கமுடியாது
தப்புத் தாளங்கள் போடும்வரை
சோற்றுக்குப் பஞ்சம் வந்தால்
சோதனைகள் பெருகிவிடும்
கொள்ளை அதிகரிக்கும் கூடவே
கொலைகளும் சம்பவிக்கும்
காலம் கடக்குமுன்னே
கண்டுகொள்ளாவிட்டால்
கண்டதெல்லாம் கண்முன்னே நடந்தேதீரும்.
All are true Iyya! when will the people change their attitude?
ReplyDeleteமாற்றம் வரும்வரை நாம் காத்திருந்தோமானால் நமது கருத்தை கேட்க உலகில் யாரும் இருக்க மாட்டார்களே அண்ணா , நாம் கூறுவதை கூறி விடுவோம் நல்லதே நடக்குமென்று நம்புவோம்.
ReplyDelete