13 ஆண்டுகளாக இரசாயனமில்லா வேளாண்மை செய்து வருகிறேன். இயற்கை வேளாண்மையின் தந்தை மாசானாபு புகோகா அவர்களிடம் நேரடிப்பயிற்சி பெற்றவன். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் மெம்பராக 6 ஆண்டுகள் சேவை செய்துள்ளேன். அகில இந்திய வானொலியில் கிராமிய நிகழ்சிகளுக்கு ஆலோசகராக 2 ஆண்டுகள் சேவைசெய்துள்ளேன். பொள்ளாச்சி பகுதியில் கண்தான இயக்கத்தின் மூலம் 250 ஜோடிக்கண்கள் தானம் பெற்று சங்கரா கண் வங்கிக்கு அளித்துள்ளேன். லீசா ( http://leisaindia.org), உழவரின் வளரும் வேளாண்மை, கலைக்கதிர், Spices India, நாம் உழவர் போன்ற இதழ்களில் எனது படைப்புகள் வந்துள்ளன. கல்லூரிகள் மற்றும் விவசாயக்கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன். வானொலி நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளேன். தொடர்புக்கு : +91 9442416543